அபிநந்தனுடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்த சக வீரர்கள் !

  ஸ்ரீதர்   | Last Modified : 05 May, 2019 01:02 pm
iaf-pilot-abhinandan-varthaman-poses-for-selfies-with-colleagues

பாகிஸ்தானில் இருந்து மீண்டு வந்த விமானப்படை அதிகாரி அபிநந்தனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு சக வீரர்கள் ஆரவாரம் செய்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின்போது, பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்திய அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை வைக்கப்பட்டு பின்னர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சைக்குப் பின் ஜம்முவில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள சக வீரர்களும், மற்ற துறை ஊழியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்ஃபி எடுத்த பின்னர் "பாரத் மாதா கி ஜே" என்று கோஷமிட்டு அபிநந்தனுக்கு அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close