இரு முறை முயன்றும் முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை- பிரதமர் அலுவலகம் விளக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 05 May, 2019 05:06 pm
mamata-didn-t-return-pm-s-calls-to-discuss-cyclone-fani-pmo-sources

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திரா மாநிலத்தின் சில மாவட்டங்கள் மற்றும் ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தில் பல மாவட்டங்களை நேற்று முன்தினம் ஃபனி புயல் கடுமையாக தாக்கியது. இதில் ஒடிசா கடுமையாக பாதிக்கப்பட்டது.

புயல் பாதிப்பு நிலவரங்கள் தொடர்பாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.  அதே போல் பிரதமர் மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் மட்டும் பேசியது ஏன் என்ற கேள்வி நேற்று எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று பதிலளித்துள்ளது. அதில் நேற்று காலை இரண்டு முறை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் உள்ளார் என்ற பதிலே கிடைத்து என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close