புயல் பாதிப்புகளை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி

  அனிதா   | Last Modified : 06 May, 2019 11:19 am
pm-modi-arrives-in-odisha

ஃபனி புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா சென்றடைந்தார்.

வங்கக்கடலில் உருவான ஃபனி புயல், ஒடிசா மாநிலம் புரி அருகே  கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ,11 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும்,  புயல் தாக்கியதில் மின்கம்பங்கள், வீடுகள், வாகனங்கள், மரங்கள் என பல பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா சென்றடைந்தார். புவனேஸ்வர் விமான நிலையத்தில், ஆளுநர் கணேஷிலால், முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் அவரை  வரவேற்றனர். இதை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிடவுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close