தந்தையின் இறுதிச் சடங்கை முடித்த கையோடு வாக்களித்த குடிமகன்

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 12:42 pm
a-man-in-chhatarpur-arrives-to-vote-after-his-father-s-last-rites-earlier-today

மத்திய பிரதேசத்தில், தந்தையின் இறுதிச் சடங்கை முடித்த கையோடு, வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த குடிமகனின் செயலை தேர்தல் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். 

நாட்டின், 17 வது மக்களவை தேர்தலுக்கான, 5ம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய பிரதேசத்தில் உள்ள, கஜ்ராஹோ மக்களவை தொகுதிக்குட்பட்ட, சத்தர்பூர் பகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இப்பகுதியை சேர்ந்த ஒருவர், இன்று காலை மரணம் அடைந்த அவரின் தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டு, நேராக மயானத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். 

தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு முடித்துவிட்டு, நேராக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி அந்த நபரை, வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிள் வெகுவாக பாராட்டினர். வாக்குரிமை உள்ள ஒவ்வொரு குடிமகனும், அவசியம் வாக்களிக்க வேண்டும் என்பதை, இவரை பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close