அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் எவ்வளவு மதிப்பெண் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 03:20 pm
do-you-know-about-smriti-irani-s-daughter-s-mark-in-10-standard-board-exam

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில், தன்  மகள் ஜோயிஸ் இரானி, 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருப்பதாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தின் கீழ் கல்வி பயின்று, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியோருக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில், தன் மகளின் தேர்வு முடிவு குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து இரானி, ‛‛இன்றைய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், என் மகள் ஜோயிஸ் இரானி, 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. என் மகளை காண சென்றுகொண்டிருக்கேன்’’ என, ஸ்மிருதி இரான டுவிட்டரில் பதிவிட்டு, தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close