நீட் தேர்வர்களுக்கு ஓர் நற்செய்தி !

  ராஜேஷ்.S   | Last Modified : 06 May, 2019 09:02 pm
who-do-not-write-neet-exam-another-chance

கர்நாடக மாநிலத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத இயலாத 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இத்தேர்வினை எழுத மறு வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஹம்பி விரைவு ரயில் தாமத்தால் 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியவில்லை என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், "ரயில் தாமத்தால் நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு, இத்தேர்வை எழுத மறுவாய்ப்பு வழங்கப்படும்" என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ஜவடேகரின் இந்த அறிவிப்பு தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close