கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி

  முத்துமாரி   | Last Modified : 07 May, 2019 01:14 pm
sc-allows-karti-chidambaram-to-go-to-foreign

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல, பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இன்று அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றன.கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close