காணாமல் போன காஷ்மீர் மாணவன் பாக்., சிறையில் தவிப்பு?

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 05:22 pm
kashmiri-student-who-went-missing-from-noida-found-in-pakistani-jail

உத்தர பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலையில் படித்து வந்த ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மாணவன், ஐந்து மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அந்த மாணவன் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் வடக்கு காஷ்மீரை சேர்ந்தவர், சையது வாஹித், 23. இவர், உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலையில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அவர் பல்கலைக்கு வரவில்லை என சக நண்பர்கள் கூறினர். 

அவர் வீட்டிற்கும் செல்லாததால், சையது வாஹித்தை காணவில்லை என, அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சையது வாஹித் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்திருக்கிறது என, அவரது தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான அந்நாட்டு பிரஜை ஒருவர் தனக்கு போன் செய்ததாகவும், தன் மகன் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தன்னிடம் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close