ராகுலுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 08 May, 2019 10:55 am
chandrababu-naidu-consulted-with-rahul

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். 

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், 3 அணி உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். அடுத்து அமையும் ஆட்சியில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் செலுத்த வியூகம் அமைக்கப்பட்டு மாநில கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சந்திரசேகர ராவ் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து 3வது அணி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் 3 அணி அமையும் பட்சத்தில் அதை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close