சபாநாயகர் நோட்டீஸ்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 11:18 am
kallakurichi-mla-files-case-in-sc-against-speaker-s-notice

சபாநாயகர் அளித்துள்ள நோட்டீசுக்கு தடை கோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

சபாநாயகர் அளித்துள்ள நோட்டீசுக்கு பதில் அளிக்க தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு நேற்று சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்திருந்தார்.

இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள சட்டப்பேரவை செயலகம்,  "சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தற்போது பதில் அளிக்க தேவையில்லை. சபாநாயகர் நோட்டீஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை பிரபுவுக்கு பொருந்தும்" என்று விளக்கம் அளித்தது. 

இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ பிரபு இன்று மனு அளித்துள்ளார்.  முன்னதாக, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகிய இருவரும் தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எனவே, பிரபுவின் மனு மீதான விசாரணையில், முன்னதாக இரண்டு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில், விதித்த இடைக்காலத்தடை பிரபுவுக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறும். பின்னர் இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் தொடர்ந்த வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close