உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 12:33 pm
rahul-gandhi-s

பிரதமர் மோடி திருடர் என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டதாக கூறியதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாக கூறி, எதிர்க்கட்சிகள் பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில், "ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதற்கான எந்த முகாந்திரமும் இல்லை" என்று கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. 

அதே நேரத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக லீக் ஆன ஆவணங்களை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடையே பேசும் போது, "ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதையும், காவலாளி என்று கூறிவரும் பிரதமர் மோடி, ஒரு திருடன் என்பதையும் உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். 

இதையடுத்து ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது பாஜக. இந்த வழக்கின் விசாரணையில், இன்று ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இதற்காக அவர் மூன்று பக்க அறிக்கையுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

முன்னதாக வருத்தம் தெரிவித்து தாக்கல் செய்த இரண்டு பிரமாணப் பத்திரங்களை உச்சநீதிமன்றம் ஏற்காத நிலையில், இன்று நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி மூன்றாவது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close