டெல்லியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்! 2.5 லட்சம் பேர் பங்கேற்பு

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 12:52 pm
modi-rally-in-delhi-prime-minister-to-address-public-meeting

டெல்லியில் மே 12ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பிரதமர் மோடி இன்று மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் ஐந்து கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. வருகிற மே 12ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தல் மற்றும் மே 19ம் தேதி 7ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 

டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட 2.5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லியில் பிரதமர் மோடி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக அமித் ஷா, டெல்லியில் இரண்டு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று  பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close