புவனேஸ்வரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 02:59 pm
union-minister-dharmendra-pradhan-visits-chandaka-area-in-bhubaneswar-to-review-restoration-of-the-power-grid-damaged-due-to-cyclonefani

ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டாவது நாளாக இன்றும் நேரில் பார்வையிட்டு, சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக, 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் சாய்ந்ததால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாேக்குவரத்து சீராவதில் தாமதம் ஏற்பட்டுமள்ளது. 

இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசின் சார்பில், 381 கோடி ரூபாய் மற்றும் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேத மதிப்பீடு முடிந்ததும், மேலும் நிவாரணத் தொகை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், புவனேஸ்வரில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக, புயலால் மின் கோபுரங்கள் சாய்ந்த பகுதிகள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் அவர், தொடர்ந்து ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close