சர்ஜிக்கல் ஸ்டிரைக்: காங்கிரஸ் சொல்வது பொய் - ஆர்.டி.ஐ., தகவலில் அம்பலம்!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 06:19 pm
no-data-on-surgical-strikes-carried-before-september-2016-army-official

‛முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது போல், 2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான, காங்., ஆட்சி காலத்தில், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக, எவ்வித துல்லிய தாக்குதல்களும் நடத்தப்படவில்லை’ என, ராணுவ நவடிக்கைகளுக்கான இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

பாக்., ஆதரவு பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையாக, மத்திய அரசின் உத்தரவின் படி, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழிகள் மற்றும் பங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. இந்த துல்லிய தாக்குதலை, சர்ஜிக்கல் ஸ்டிரைக் என அழைக்கிறோம். 

இந்நிலையில், ‛‛பா.ஜ., ஆட்சியில் மட்டும் அல்ல, காங்., தலைமையிலான ஆட்சியில் பல முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அப்போது எங்கள் தலைமையிலான அரசு அதை விளம்பரப்படுத்தவில்லை’’ என, காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மாேகன் சிங் கூறினார். அவரின் பேச்சை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆமாேதித்தனர். 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்முவை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர், ராேஹித் சவுதாரி, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு கேள்வியை முன் வைத்திருந்தார். அதில், 2004 - 2014 வரையிலான காங்., ஆட்சி காலத்தில் எத்தனை முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என கேட்டிருந்தார். 

இதற்கு பதில் அளித்துள்ள ராணுவ நடவடிக்கைகளுக்கான மத்திய இயக்குனரகம், ‛‛2004 - 2014 வரையிலான கால கட்டத்தில், எவ்வித சர்ஜிக்கல் ஸ்டிரைக்கும் நடத்தப்படவில்லை. 29 செப்டம்பர், 2016ம் ஆண்டு தான், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பல்வேறு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன’’ என பதில் அளித்துள்ளது. 

அதன் பின், சமீபத்தில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலக்கோட்டில், இந்திய விமானப் படை குண்டு மழை பொழிந்து, அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது குறிப்பிடத்தக்கது. 

நாங்களும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம் என, முன்னாள் பிரதமர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கூறி வந்த நிலையில், ஆர்.டி.ஐ., கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம் வெளியாகியுள்ள தகவல் அந்த கட்சி தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close