கமாண்டோக்களாக மாறிய முன்னாள் பெண் நக்சலைட்டுகள்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 06:54 pm
thirty-maoists-turned-women-commandos

சத்தீஸ்கரில், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்களை புறக்கணித்து, அவற்றை செயல்படுத்த விடாமல் தடுத்து வந்த பெண் நக்சலைட்டுகள், மனம் திருந்தி சரணடைந்தனர். அவர்களில், 30 பேர், நக்சல்களை ஒடுக்கும் சிறப்பு படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால், அங்கு அவர்களை ஒடுக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. அரசின் முயற்சிக்கு பலனாக, அவ்வப்போது, நக்சலைட்டுகள் குழுக்களாக சரண் அடைவது வழக்கம். 

அந்த வகையில் நக்சலைட்டுகளாக செயல்பட்டு வந்த பெண்கள் குழு, சமீபத்தில் சரண் அடைந்தது. அவர்களில், 30 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு முறையான ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்டு, நக்சலைட்டுகளை ஒடுக்கும் சிறப்பு படையின் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close