கேதார்நாத் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 07:16 pm
portals-of-kedarnath-temple-to-open-tomorrow

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். 

உத்தரகண்ட் மாநிலத்தில், இமயமலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ளது கேதார்நாத் கோவில். பிரசித்தி பெற்ற சிவன் கோவிலான இங்கு, ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே பூஜை நடைபெறும், பனிக்காலங்களில், இங்கு கடும் உறைபனி நிலவும் என்பதால், கோவில் நடை திறக்கப்படாது. 

இந்நிலையில், இந்த ஆண்டு நாளை முதல் அக்டோபர் 29ம் தேதி வரை, கேதார்நாத் கோவிலில், பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக, கேதார்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் தயாராகியுள்ளனர். 

ஏற்கனவே, கேதார்நாத் கோவில் வாயிலை நெருங்கிய பக்தர்கள், இன்று இரவு அங்கேயே தங்கி, நாளை விடிகாலை நடை திறக்கப்பட்டதும், சுவாமி தரிசனம் செய்யவுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close