ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி!

  முத்துமாரி   | Last Modified : 09 May, 2019 12:04 pm
rahul-gandhi-citizenship-row-top-court-dismissed-plea-no-merit-in-plea-sc

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய குடியுரிமை மட்டுமின்றி, இங்கிலாந்து குடியுரிமையையும் பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக நீதிமன்றம் ஆய்வு செய்து, அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த ஜெய் பகவான் கோயல் மற்றும் சந்திர பிரகாஷ் தியாகி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், "இந்திய குடியுரிமை இருப்பதால் தான் அவர் தேர்தலில் போட்டியிட முடிகிறது. இந்தியாவில் இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை. இரட்டை குடியுரிமை பெற்றால் எவ்வாறு அவர் தேர்தலில் போட்டியிடுவார்?" என்று கேள்வி எழுப்பியதோடு, ராகுலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close