புனே தொழிற்சாலையில் தீ விபத்து: 5 ஊழியர்கள் பலி!

  Newstm Desk   | Last Modified : 09 May, 2019 12:37 pm
5-killed-in-fire-at-cloth-godown-in-pune

புனேவில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஊழியர்கள் தீயில் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உருளி தேவாச்சி (Uruli Devachi) என்ற கிராமத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில், இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரவுப்பணி முடிந்து சில ஊழியர்கள் அங்கே உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். தீ பற்றி எரிவதை அறிந்து, சிலர் விழித்துக்கொண்டதால் காயத்துடன் தப்பினர். இருந்தும் அங்கிருந்த 5 ஊழியர்கள் தீயில் கருகி பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 4 தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் தற்போது போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close