நீரவ் மோடியின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி!

  முத்துமாரி   | Last Modified : 09 May, 2019 01:16 pm
u-k-court-denies-bail-to-nirav-modi-for-third-time

வங்கிக்கடன் மோசடி வழக்கில் சிக்கிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை, லண்டன் நீதிமன்றம் இன்று மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் நீரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்ஷியும் லண்டனில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு ஏற்ப, லண்டன் போலீசார் கடந்த மாதம் நீரவ் மோடியை கைது செய்தனர். 

தொடர்ந்து, அவர் லண்டன் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். நீரவ் மோடி ஜாமீன் கோரி, லண்டன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீரவ் மோடியின் ஜாமீன் மனு இன்று மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் அடுத்த விசாரணை மே 30ம் தேதி நடைபெறும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close