ராஜீவ் காந்தி படுகொலைக்கு பாஜக தான் காரணம்: அகமது படேல்

  Newstm Desk   | Last Modified : 09 May, 2019 05:51 pm
ahmed-patel-blames-bjp-for-rajiv-gandhi-s-death-says-he-died-because-of-its-hatred

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பாஜக தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து விமர்சித்து பேசியிருந்தார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், "மறைந்த முன்னாள் பிரதமரை விமர்சிப்பது பாஜகவின் கோழைத்தனத்தை காட்டுகிறது. ராஜீவ் படுகொலைக்கு யார் காரணம்? மத்தியில் வி.பி.சிங் ஆட்சிக்கு வந்த பிறகு, ராஜீவுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பு பறிக்கப்பட்டது. 

ராஜீவ் குறித்து கூறும் ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அவர் இங்கு இல்லை. பாஜக, அவர் மீது காட்டிய வெறுப்பு தான் அவரை உயிரிழக்கச் செய்தது" என்று பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close