காஷ்மீர் எல்லையில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

  முத்துமாரி   | Last Modified : 10 May, 2019 11:18 am
terrorist-killed-in-encounter-in-jammu-and-kashmir-s-shopian

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் நமது ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்ததாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடவே, பாதுகாப்புப்படையினரும் பதிலுக்கு சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக, காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனால் காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close