சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி ஆவேசம்!

  முத்துமாரி   | Last Modified : 11 May, 2019 10:56 am
rahul-gandhi-asks-sam-pitroda-to-apologise-for-his-remark-on-1984-anti-sikh-riots

1984ம் ஆண்டு சீக்கியர்கள் கலவரம் குறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ராடோவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

1984ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில், காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. 

இதுகுறித்து பதில் அளித்த ராகுல் காந்தி குடும்பத்தினரின் நெருங்கிய நண்பரான சாம் பிட்ரோடா, "1984ம் ஆண்டு கலவரத்தை பற்றி இப்போது பாஜகவுக்கு என்ன கவலை. நடந்தது நடந்துவிட்டது..அதனால் என்ன?" என்று கூறியுள்ளார். இது அரசியல் சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அதே நேரத்தில் தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக, சாம் பிட்ரோடாவும் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் கண்டிப்பாக இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்பு கேட்க சொல்கிறேன்" என்று கூறியுள்ளார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close