தொழில்நுட்ப கோளாறு: அவசரமாக தரைஇறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானங்கள்!

  ஸ்ரீதர்   | Last Modified : 11 May, 2019 03:12 pm
two-spicejet-boeing-flights-suffer-mid-air-glitches

அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

மும்பை சத்ரபதி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் பறந்த 16 நிமிடங்களிலிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டு பிடித்தார்.

அவர் உடனடியாக மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் விமானி மீண்டும் மும்பை விமான நிலையத்தில்  விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.  

அதே போல் பெங்களூரூவிலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதன் விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அந்த விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகள் வேறு விமானங்கள் மூலம்  அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close