குற்றவாளிகளுக்கு சி.சி.டி.வி கேமராக்கள் தான் 'செக் மேட்' - விஸ்வநாதன் ஆனந்த்

  முத்துமாரி   | Last Modified : 11 May, 2019 02:58 pm
cctv-cameras-are-the-check-mate-of-convicts-viswanathan-anand

குற்றவாளிகளுக்கு சி.சி.டி.வி கேமராக்கள் நிச்சயம் ஒரு "செக் மேட்" ஆக அமையும் என்று செஸ் 'கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தயாரிக்கப்பட்ட "மூன்றாவது கண்" என்ற விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடினை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன், முன்னாள் உலக சுதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இயக்குநர் சம்பத் குமார், காவல் ஆணையர் (தெற்கு) மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் "மூன்றாவது கண்" குறும்படத்தின் குறுந்தகடை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் வெளியிட,  அதை சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, சி.சி.டி.வி கேமராவின் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் சி.சி.டி.வி கேமரா உதவியால் கண்டறியப்பட்ட பல முக்கிய குற்ற சம்பவங்களின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிய சி.சி.டி.வி காட்சிகள் எந்த அளவுக்கு முக்கியத்துவாக இருந்தன என்பது குறித்தும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், "சி.சி.டி.வி கேமராக்கள் மக்களின் நலனுக்கானவை. உண்மைக் குற்றவாளிகளை குற்றம் நடப்பதற்கு முன்னரும், பின்னரும் கண்டறிய உதவுகிறது. மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பொருத்தப்பட்ட பின்னர் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு சி.சி.டி.வி கேமராக்கள் நிச்சயம் ஒரு "செக் மேட்" ஆக அமையும்" என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close