ஷிம்லாவில் கடும் பனிப்பாெழிவு: சுற்றுலா பயணியர் அவதி

  Newstm Desk   | Last Modified : 11 May, 2019 05:43 pm
heavy-traffic-jam-after-hailstorm-in-dhali-chharabra-and-mashobra-areas-of-shimla-sue-to-snow-fall

ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

நாட்டின் பிற பகுதிகளில் கோடை உச்சத்தை அடையும் போது, குளிரை அனுபவிப்பதற்காகவும், வெப்பத்திலிருந்து தப்பவும், ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லாவில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டும், ஷிம்லா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், ஷிம்லாவின் டாலி, சரப்ரா, மசோப்ரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று  வழக்கத்தை விட மிக அதிகமாக, பனிப் பொழிவு காணப்படுகிறது. இதனால், சாலை போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close