ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இந்தியாவில் கால் பதிப்பு?

  Newstm Desk   | Last Modified : 11 May, 2019 07:22 pm
islamic-state-claims-it-has-established-province-in-india-calls-it-wilayah-of-hind

சிரியா, ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தற்போது, இந்தியாவில் கால் பதித்துள்ளதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிரியா, ஈராக்கில் ஒடுக்கப்பட்டதை அடுத்து, தற்போது, இந்தியாவில் கால் பதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சிரியா, ஈராக் நாடுகளில் தாக்குதல் நடத்தில், அந்நாடுகளின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய பயங்கரவாதிகள் மீது, அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல் நடத்தி, அவர்களை அழித்தது. 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பகுதியில் உள்ள சாேபியான் மாவட்டத்தில், ஐ.எஸ்.,பயங்கரவாதிகள் தங்கள் அமைப்பின் கிளையை துவங்கியுள்ளதாகவும், அதற்கு விலாயா ஆப் ஹிந்த் எனப் பெயரிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில், இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைப் போல், இந்தியாவிலும் தாக்குதல் நடத்தவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தப்படுவதோடு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close