உத்தர பிரதேசத்தில், கங்கா சப்தமியை முன்னிட்டு, வாரணாசியில் கங்கை கரையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கங்கை நதிக்கரையில் ஏராளமானோர் ஒன்று கூடி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஹிந்துக்கள் புனித நதியாக கருதும் கங்கையில் தினசரி சிறப்பு ஆரத்தி வழிபாடு நடப்பது வழக்கம். இந்நிலையில், கங்கா சப்தமி நாளான இன்று, மேலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வேத பண்டிதர்கள், பூசாரிகள், பக்தர்கள் என பல தரப்பினரும், வாரணாசியில் உள்ள கங்கை கரையில் ஒன்று கூடி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனால், வாரணாசி நகரம் கோலாகல உற்சாகத்துடன் காணப்பட்டது.
newstm.in