டூரிஸ்ட் வேன் - கார் நேருக்கு நேர் மோதல்: 13 பேர் உடல் நசுங்கி பலி

  Newstm Desk   | Last Modified : 11 May, 2019 08:51 pm
13-killed-several-injured-after-bus-collides-with-suv-in-andhra-pradesh

ஆந்திராவில், சுற்றுலா பயணியர் சென்ற சொகுசு வேன் - சொகுசு கார் நேருக்கு நேர் மாேதிய விபத்தில், 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

ஆந்திர மாநிலம் கர்னுால் மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் மீது, எதிரே வந்த சொகுசு வேன் மாேதியது. இதில், இரு வாகனங்களில் பயணம் செய்த, 13 பேர் உட்ல நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதில் பயணித்த மேலும் சிலர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்தோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர், காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, பிரதமர் நரேந்திர மாேடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close