தேர்தல் ஆணையத்துக்கு ஆஸ்திரேலியே சிறப்பு தூதர் பாராட்டு!

  ஸ்ரீதர்   | Last Modified : 12 May, 2019 03:57 pm
the-australian-high-commissioner-to-india-who-is-here-to-observe-the-2019-lok-sabha-elections-praised-the-election-commission

இந்திய வாக்குசாவடிகள் என்னை வியப்படைக்க வைக்கின்றன. இத்தனை வாக்காளர்களை இங்கு வரவழைப்பது எவ்வளவு கடினமான செயல் என்பது புரிகிறது என்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய சிறப்பு தூதர் ஹரிந்தர் சித்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் 6 -ஆவது கட்டமாக 7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிடுவதற்காக இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய சிறப்பு தூதர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

நடைபெறும் மக்களவை தேர்தல் குறித்து, டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர்,  "இந்தியாவில் நடைபெறும் தேர்தல் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் தான் தேர்தல் அமைதியாக நடைப்பெற்று வருகிறது என்று தெளிவுப்பட தெரிகிறது. மேலும் மக்கள் தாங்கள் பதிவு செய்த வாக்கை ஒப்புகை சீட்டு முறை மூலம் சரிபார்த்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதும் பாராட்டக்குரியது என்று ஹரிந்தர் சித்து தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close