ஃபனி புயல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு!

  அனிதா   | Last Modified : 13 May, 2019 09:57 am
fani-storm-death-toll-rises-to-64

ஒடிசாவில் ஃபனி புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 

வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் ஒடிசாவில் பூரி அருகே கடந்த 3ஆம் தேதி கரையை கடந்தது. இந்த புயலால் ஒடிசா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்நிலையில், ஒடிசாவில் இந்த புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 

ஃபனி புயல் பாதிப்பு காரணமாக பூரி பகுதியில் 39 பேரும், கென்ட்ராபடாவில் 4 பேரும் மயூர்பஞ்ச்சில் 3 பேரும் ஜஜ்பூரில் 6 பேரும் கட்டாக் பகுதியில் 9 பேரும் என மொத்தம் 64 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close