ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வீடியோகான் நிறுவனத்திற்கு கடந்த 2012ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி சார்பில் ரூ. 3250 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த கடன் வழங்கப்பட்ட போது வங்கியின் தலைவராக சந்தோ கோச்சார் இருந்தார். இதனிடையே சந்தா கோச்சார் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐசிஐசிஐ நிறுவன முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தி வருகிறது.