இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் ராஜஸ்தானுக்கு மாற்றம்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 May, 2019 04:57 pm
iaf-wing-commander-abhinandan-varthaman-posted-at-rajasthan-s-suratgarh-base

பாதுகாப்பு காரணங்களால் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் ஸ்ரீநகரிலிருந்து  ராஜஸ்தான் விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த 27ம் தேதி இந்திய எல்லைக்கோட்டை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் இந்தியா வான் வழி தாக்குதல் நடத்தியது.

அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது.

இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, ஓய்வில் இருந்தார். இதையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் ஸ்ரீநகரில் இருந்து மீண்டும் ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். 

newstmm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close