காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பிரிவினைவாதிகள் கல்வீச்சு 

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 06:16 pm
stone-pelting-against-police-in-kashmir-47-jawans-injured

ஜம்மு - காஷ்மீரில், நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநில போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது, பிரிவினைவாதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், 47 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில், சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் மீது, திடீரென அங்கு வந்த கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. பிரிவினைவாதிகளான அவர்கள், வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில், 47 பேர் காயமடைந்தனர். 

பின், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close