மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த காரில் தீ பற்றியதால் பரபரப்பு  

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 06:42 pm
fire-broke-out-in-a-moving-car-in-gujarat


சூரத்தில், மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

குஜராத் மாநிலம் சூரத்தில், சர்தார் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. எதிர்பாராத தீ விபத்தால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனர், அதை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடினார். இதை பார்த்த பிற பயணிகளும், தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி ஓடினர். 

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் பற்றிய தீயை அணைத்தனர். எனனினும், இந்த விபத்தால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. காரில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close