2014 தேர்தலைவிட 2019 தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்: பிரதமர் மோடி

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 02:41 pm
nda-is-going-to-bag-more-mps-this-year-as-compared-to-2014-pm-modi

2014 பொதுத் தேர்தலை விட 2019 தேர்தலில் கண்டிப்பாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 6 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதியுள்ள 59 தொகுதிகளுக்கு, 7ம் கட்ட தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. 

பிரதமர் மோடி தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது: 

மக்களவைத்  தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே, கடந்த 5 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்த சாதனைகளை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். எனவே நாங்கள் செய்த சாதனைகளை ஒவ்வொன்றாக எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமில்லை. 

கடந்த ஆண்டுகளில் மக்களுக்கு தேவையானவற்றை செய்திருக்கிறோம். இனியும் செய்வோம். அதேபோன்று நான் முன்னதாக சொன்னதை போல, 2014 பொதுத் தேர்தலை விட 2019 தேர்தலில் கண்டிப்பாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

2014ம் ஆண்டை விட 2019ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக எம்.பிக்கள் இடம்பெறுவார்கள் என அவர் பேசியுள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close