'கூட்டணி அரசாங்க' அனுபவம் எங்களுக்கு உள்ளது: பிரதமர் மோடி

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 11:57 am
pm-modi-makes-big-statement-says-we-have-an-experience-of-running-a-coalition-govt

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 'கூட்டணி அரசாங்க' அனுபவம் உள்ளது என்றும், இதன் மூலம் நாட்டை நேர்மையுடனும், ஒருமைப்பாட்டுடனும் வழிநடத்த முடியும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பிரதமர் மோடி தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது: 

எனக்கு ஹரியானாவில் உள்ள பன்சிலால் அரசு பற்றியும் தெரியும்; சவுதாலா அரசு பற்றியும் தெரியும்;  அதே போன்று ஜம்மு-காஷ்மீரில் அப்துல் சாஹிப் அரசு பற்றி தெரியும்; முப்தி தலைமையிலான அரசு குறித்தும் தெரியும். 

குஜராத்தில் சைமன் பாய் படேலின் அரசு எப்படி இருக்கும் என்று தெரியும்; மோடி அரசு குறித்தும் தெரியும்; இதை நான் கர்வத்துடனோ, ஆணவத்துடனோ சொல்லவில்லை. இந்திய அரசியல் என்பது எதிரெதிர் துருவங்களையே உடையது. காங்கிரஸும், பாஜக மாதிரி. 

நாங்கள் இந்த தேர்தலில் எவ்வளவு இடங்களை பெறுவோம் என்று முக்கியமில்லை. எவ்வளவு இடங்கள் பெற்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். நாங்கள் அனைவரையும் அரவணைத்து செல்கிறோம். இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமையை அறிய முடியும். இது நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும். ஆட்சிக்கு வலிமையை கொடுக்கும். 

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 'கூட்டணி அரசாங்க' அனுபவம் உள்ளது. இதன் மூலம் நாட்டை நேர்மையுடனும் ஒருமைப்பாட்டுடனும் வழிநடத்த முடியும். அதை நாங்கள் நிரூபித்து காட்டியுள்ளோம் என்று பேசியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close