'நான் கூறியது இப்போது நிரூபிணமாகியுள்ளது' - மணி ஷங்கர் அய்யரின் சர்ச்சை கருத்து!

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 12:54 pm
mani-shankar-aiyar-justifies-his-neech-aadmi-jibe-at-pm-modi-asks-wasn-t-i-prophetic

கடந்த 2017ல் பிரதமர் மோடி குறித்து தான் கூறியது தற்போது நிரூபணமாகியுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி ஷங்கர் அய்யர் கூறியுள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவரான மணி ஷங்கர் அய்யர், கடந்த டிசம்பர் 7, 2017ல் குஜராத் சட்டசபை தேர்தலின் போது, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். 'பிரதமர் மோடி ஒரு தாழ்ந்த சாதியை சார்ந்தவர்' என்று பேசியிருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பையடுத்து, அவரை இரண்டு வருடங்களுக்கு பதவி நீக்கம் செய்தது காங்கிரஸ். 

இந்த நிலையில், 'நான் முன்னதாக கூறியது இப்போது நிரூபிணமாகியுள்ளது' என மணி ஷங்கர் அய்யர் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். இதனால் பிரதமர் மோடியை ஜாதி குறித்து அவர் பேசியது, மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துஅரசியல் சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close