ராஜஸ்தான்- நோயாளியின் வயிற்றுக்குள் ஆணி புதையல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 14 May, 2019 04:17 pm
116-iron-nails-wire-removed-from-man-s-stomach-in-rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் நோயாளி ஒருவரின் வயிற்றுக்குள் 116 ஆணிகள், ஒரு வயர் கம்பி மற்றும் ஒரு இரும்பு வாலட் ஆகியவை இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்ட மருத்துவமைனயில் 42 வயதான போலா சங்கர் தனக்கு இரண்டு நாட்களாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் சயனி என்பவர் போலா சங்கரை ஸ்கேன் எடுக்கும் படி கூறியுள்ளார்.

அதன்படி சங்கர் ஸ்கேன் எடுத்து வந்து மருத்துவரிடம் கொடுத்துள்ளார். அதை பார்த்த மருத்துவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. சங்கரின் வயிற்றில் ஆணி போன்ற ஏராளமானவை இருந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒன்றரை மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் நோயாளி சங்கரின் வயிற்றில் இருந்து 6.5 சென்டி மீட்டர் அளவுள்ள 116 ஆணிகள், ஒரு சிறிய வயர் கம்பி மற்றும் ஒரு இரும்பு வாலட் ஆகியவை அகற்றப்பட்டது.

இதை பற்றி மருத்துவர் சயனி தெரிவிக்கையில் நோயாளி சங்கர் தோட்டக்காரராக பணிபுரிந்து வந்ததாகவும், அவர் எப்படி ஆணிகளை முழுங்கினார் என்பதை அவரால் சொல்லமுடியவில்லை என்றார்.

மேலும் வயிற்றுக்குள் இருந்த ஆணிகள் ஏதாவது உள்உறுப்பை காயப்படுத்தியிருந்தாலும் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர் சயனி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close