2014-ம் ஆண்டை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்- ராஜ்நாத் சிங்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 May, 2019 04:19 pm
bjp-will-get-more-seats-than-what-it-got-in-2014-says-rajnath-singh

பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மணிசங்கர் ஐய்யரின் கருத்துக்கு அக்கட்சி என்ன பதில் அளிக்க போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2014-ம் ஆண்டைக் காட்டிலும் அதிகமான இடங்களில் பாஜக வென்று ஆட்சியை தொடர்ந்து 2-வது முறையாகக் கைப்பற்றும் என்றார்.

மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அடுத்த பிரதமர் யார் என்பதை அறிவித்து விட்டதாகவும் ஆனால் எதிர்கட்சிகள் தங்களது பிரதமர் யார் என்பதை அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மீது வைத்திருந்த அதே நம்பிக்கையை மக்கள் இப்போதும் வைத்துள்ளார்கள். அதனால் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற போவது உறுதி என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close