இந்திய ராணுவ சீருடையில் விரைவில் மாற்றம்?

  ஸ்ரீதர்   | Last Modified : 14 May, 2019 04:54 pm
army-uniform-set-for-another-makeover

இந்திய ராணுவ வீீரர்களின் சீருடையில் விரைவில் மாற்றம் வரவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவ வீரர்களுக்கு முதன் முதலில் பருத்தி வகை சீருடைகள் வழங்கப்பட்டன. ஆனால் பருத்தி வகை சீருடைகளை பராமரிப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் பின்னர் டெரிகாட்டன் துணிகளிலான சீருடைகள் வழங்கப்பட்டன.

தற்போது சீதோஷ்ண சூழ்நிலை மற்றும் போர் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்ப ராணுவ சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சீருடையின் நிறம், மற்றும் பதவியை குறிக்கும் பட்டைகள் மற்றும் பொத்தன்களில் சில மாற்றங்கள் செய்யபடவுள்ளதாகவும் அதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close