மம்தா மீம்ஸ் விவகாரம்: பாஜக பெண் நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 06:25 pm
mamata-banerjee-meme-sc-removes-apology-condition-grants-bail-to-bjp-worker-priyanka

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மீம்ஸை வெளியிட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா ஷர்மாவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பிரபல விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதையடுத்து பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில், அவரது முகத்திற்கு பதிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மீம்ஸ் உருவாக்கி வெளியிட்டிருந்தார் மேற்கு வங்க பாஜக இளைஞரணி நிர்வாகி பிரியங்கா சர்மா. 

இதையடுத்து மேற்கு வங்க  போலீசார் பிரியங்கா சர்மாவை கைது செய்தனர். தொடர்ந்து 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஹவுரா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து ஜாமீன் கேட்டு பிரியங்கா சர்மா உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ஒரு அரசியல் தலைவரை, மாநில முதல்வரை வைத்து மீம்ஸ் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, சர்மாவின் தரப்பு வழக்கறிஞர், ' பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கல் குறித்து சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்ட வருகின்றனர். மமதா குறித்து மட்டும் ஏதோ புதிதாக ஓர் மீம்ஸ் வெளியிடப்படவில்லை.

பிரியங்காவின் தற்போதைய கைதுக்கு பிறகும் சமூக வலைதளங்களில் வரக்கூடிய மீம்ஸ் நிற்கப்போவதும் இல்லை. ஏனெனில் அரசு அனுமதிப்பது என்பது கருத்து சுதந்திரத்தின் பிரதான அம்சமாகும். எனவே, இந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்பது என்பது பேச்சுரிமைக்கு எதிரானது' என்று நீதிபதிகளிடம் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து பிரியங்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை உச்சநீதிமன்றம் தளர்த்திக் கொண்டு, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close