ஜெட் ஏர்வேஸின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி அமித் அகர்வால் தனது வேலையை ராஜினாமா செய்வதாக இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தலைமை செயல் அதிகாரி வினய் துபேயும் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக வினய் துபே பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை நிர்வாகம் வழங்கவில்லை.
பெரும் கடன் சுமையால் கடந்த சில வாரங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் சி.இ.ஓ. மற்றும் துணை சி.இ.ஓ. ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in