எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது: பிரதமர் மோடி

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2019 10:49 am
pm-modi-replied-to-kamal-haasan

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது என்று கமலின் கருத்துக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். 

கமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல் மீது இந்து அமைப்பு மற்றும் பாஜக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் கமலின் கருத்து குறித்து பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது. உலகம் ஒரு குடும்பம் தான் இந்து மதத்தின் கொள்கை" என்று கூறியுள்ளார். 

newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close