’விங் கமாண்டர்’ அபிநந்தனின் படைப்பிரிவுக்கு சிறப்பு 'பேட்ச்' - பெருமைப்படுத்திய இந்திய விமானப்படை!

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2019 04:08 pm
iaf-wing-commander-abhinandan-s-squadron-gets-falcon-slayer-patches-to-mark-f-16-kill

அமெரிக்காவின் தயாரிப்பான பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை  வீழ்த்தியதற்காக  ’விங் கமாண்டர்’ அபிநந்தனின் படைப்பிரிவுக்கு 'பருந்துகளை வீழ்த்துபவன்'  என்ற சிறப்பு முத்திரை வழங்கி இந்திய விமானப்படை பெருமைப்படுத்தியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயன்ற, பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த, அமெரிக்காவின் எப்-16 விமானத்தை இந்திய விமானப்படை ’விங் கமாண்டர்’ அபிநந்தன் வர்தமான் வீழ்த்தினார். அவ்வாறு வீழ்த்தும் சமயத்தில், அவர் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கினார். தொடர்ந்து, அபிநந்தனை மீட்கும் முயற்சியிலும் இந்தியா வெற்றி கண்டது,

இதையடுத்து, பாதுகாப்பு கருதி அவர் ஜம்மு காஷ்மீரில் இருந்து வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அபிநந்தன் ராஜஸ்தானில் உள்ள சூரத்கர் விமானப் படை தளத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

இதற்கிடையே அவரது படைப்பிரிவுக்கு 'பால்கன் ஸ்லேயர்' என்ற சிறப்பு பேட்ச் ஒன்றை வழங்கி, இந்திய விமானப்படை அவரை பெருமைப்படுத்தியுள்ளது. 

'பால்கன் ஸ்லேயர்' (Falcon Slayer) என்றால் 'பருந்துகளை வீழ்த்துபவன்' என்று பொருள். அவர், அமெரிக்காவின் தயாரிப்பான பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை வீழ்த்தியதால் அவரது படைக்கு இந்த சிறப்பு 'பேட்ச்' வழங்கியதாக இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close