ஜம்மு - காஷ்மீர் : துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 16 May, 2019 04:58 pm
man-held-with-revolver-live-cartridges-in-j-k

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சாலையில் சென்ற சந்தேக நபரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பகவதி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.

அப்போது அவர் ஒரு கைத்துப்பாக்கியும், தோட்டாவும் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர், அப்பகுதியை சேர்ந்த அனில் சர்மா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, காந்தி நகர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close