தெரு நாய்கள் கடித்து குதறி 7 வயது சிறுமி பலி

  Newstm Desk   | Last Modified : 16 May, 2019 07:27 pm
devki-a-7-year-old-girl-was-mauled-to-death-by-a-pack-of-stray-dogs-in-barsana-up

உத்தர பிரதேசத்தில், தெரு நாய்கள் கடித்து, ஏழு வயது சிறுமி பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பர்சானா கிராமத்தில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை, அங்கிருந்த தெரு நாய்கள் கடித்து குதறியதில், அந்த சிறுமி கடும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தாள். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை பிடித்து, நாய்கள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியாக விளையாட அனுப்ப வேண்டாம் எனவும், எப்போதும் அவர்கள் மீது கவனம் வைக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close