ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய கடற்படை புதிய சாதனை!

  முத்துமாரி   | Last Modified : 17 May, 2019 03:42 pm
indian-navy-firing-was-undertaken-on-western-seaboard-by-indian-naval-ships-kochi-chennai

நிலத்தில் இருந்து வான் நோக்கி தாக்கும் ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்று இந்திய கடற்படை இன்று சாதனை படைத்துள்ளது. இது நமது போர் திறனை மேலும் அதிகரித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவின் தெற்கு கடற்கடை பகுதியில், இந்திய கப்பற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். சென்னை மூலமாக இந்த சோதனையானது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. கப்பல்களில் வைக்கப்பட்ட ஏவுகணைகள், வானில் இருந்து வந்த இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன. இந்திய கடற்படை, டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து, இந்த சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படையின் ஒரு முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close