டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2019 05:41 pm
jnu-student-commits-suicide-in-study-room

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக நிர்வாகிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். உயிரிழந்த மாணவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

உயிரிழந்த மாணவர் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற விபரங்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close