காஷ்மீர் எல்லையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  முத்துமாரி   | Last Modified : 18 May, 2019 08:42 am
2-terrorists-killed-in-encounter-in-j-k-s-pulwama

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படியே அப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளது தெரிய வந்தது. 

தற்போது புல்வாமா மற்றும் அனந்த்நாக் ஆகிய இரு பகுதிகளிலும், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இதில், புல்வாமா தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.   அனந்த்நாக்கிலும் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து வருகிறது. 

இதனால் காஷ்மீர் எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close