தேர்தல் அப்டேட்: ராகுல் காந்தி - சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

  முத்துமாரி   | Last Modified : 18 May, 2019 10:26 am
rahul-gandhi-chandra-babu-naidu-meet

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்டமான 7ம் கட்ட தேர்தல் நாளை(மே 19)நடைபெற உள்ளது. மேலும், மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தி வருகிறார். 

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மே 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தலாம் என்று தெரிகிறது. 

தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு இன்று பிற்பகல் உத்தரபிரதேசம் சென்று மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார். 

முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close